Published : 10 Jan 2024 05:45 AM
Last Updated : 10 Jan 2024 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய நண்பர்கள் மூலம் உதவியுண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் சாதனைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாராக்கடன் என்றிருந்த பழைய பாக்கிகள் வரும்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் தடைபடும். குடும்பத்தில் நிதானமாக பேசுங்கள். சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளவும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: முக்கிய பிரமுகர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அழகு சாதன பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலக பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளால் மன நிம்மதி கிட்டும். பூர்வீக சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். குல தெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் திருப்தி தரும்.

கன்னி: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு திருப்தி தரும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவதால் நன்மை ஏற்படும்.

துலாம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பர். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். புது ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: வியாபாரத்தில் புதிய பங்குதாரர், புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பண விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். நினைத்த காரியம் தாமதமாகும். வீண் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

மகரம்: தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இன்று சுமுகமாக முடியும். குழப்பங்கள் நீங்கி கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். சொந்தம் - பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தொல்லை தந்த வாகனம் சீராகும்.

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x