Published : 31 Dec 2023 06:19 AM
Last Updated : 31 Dec 2023 06:19 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய சம்பவங்களை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவி கிடைக்கும்.

ரிஷபம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் இருந்த பகை நீங்கும். நெருங்கிய உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வேற்று மதத்தினர், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: கல்வி தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர் பெருமக்களின் நட்பு கிடைக்கும். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்மம்: உங்களிடம் இருக்கும் மனச்சோர்வு, உடல் களைப்பு நீங்கும். உற்சாகமாக புதுமுயற்சிகளில் இறங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும்.

கன்னி: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.

துலாம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதுவேலையில் அமர்வீர்கள். உறவினர், நண்பர்கள் விரும்பி வந்துபேசுவர். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களிடம் இணக்கமாக இருக்கவும்.

தனுசு: குழப்பம் நீங்கி, தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவால் சொத்து பிரச்சினை தீரும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும்.

மகரம்: எதிர்பாராத வகையில் செலவுகள் வரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் விவாதங்கள் வேண்டாம். அக்கம் - பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பேசி பழகுவது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். புதிய பொறுப்புகள் சேரும்.

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்று மதத்தினர், வேற்று மொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x