Published : 06 Dec 2023 05:50 AM
Last Updated : 06 Dec 2023 05:50 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர். பழைய சிக்கலில் ஒன்று தீரும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

கடகம்: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

சிம்மம்: மனைவிவழி உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். அழகு, இளமை கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வழக்குகள் இழுபறியாகும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

துலாம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது அவசியம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

விருச்சிகம்: பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களுடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். விருந்தினர் வருகையால் வீடுகளைகட்டும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்.

மீனம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மகன், மகளின் கல்யாண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x