Published : 30 Nov 2023 05:41 AM
Last Updated : 30 Nov 2023 05:41 AM
மேஷம்: கடந்தகால இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.
ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும்.
மிதுனம்: சில நேரங்களில் மனம் அமைதியற்று காணப்படும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும்.
கடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானமுடன் செயல்படுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
சிம்மம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. டென்ஷன் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
கன்னி: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
துலாம்: இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது.
தனுசு: மன உளைச்சல் நீங்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். விஐபியின் அறிமுகம் கிடைக்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.
மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக்குழப்பம் நீங்கும்.
கும்பம்: சோர்வு, அலைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment