Published : 17 Nov 2023 05:45 AM
Last Updated : 17 Nov 2023 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களிடம் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களுக்கு உதவுவது போல் உபத்திரவத்தை தருவார்கள். தாயார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வேற்றுமதத்தவர், வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவர். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கடகம்: அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பிறரின் வற்புறுத்தலுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயல்வீர்கள்.

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தியானம் செய்யவும்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடன்களைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். சகோதரர்களின் ஆதரவால் பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர்.

விருச்சிகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப்பொலிவு கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

தனுசு: பண விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். வேலைகளை உடனே முடிக்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.

மகரம்: முக்கிய கோப்புகளை கவனமாக கையாள்வது அவசியம். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவர். புதிய ஆடை, ஆபரணம் சேரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x