Published : 16 Nov 2023 05:50 AM
Last Updated : 16 Nov 2023 05:50 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
குடும்ப பிரச்சினைகளை பிறரிடம் கூற வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

மிதுனம்: கவலைகள், மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பூர்வீக நிலம், வீட்டை விற்க திட்டமிடுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

கன்னி: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும்.

துலாம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் அமைதி
பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு: பல சவால்களை சமாளிக்க தன்னம்பிக்கை துளிர்விடும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும். பணவரவு உண்டு.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் ஏற்படும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள்தான் முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்கி மகிழ்வீர். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பேசி பழகவும்.

மீனம்: கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x