Published : 04 Nov 2023 05:45 AM
Last Updated : 04 Nov 2023 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்பு உண்டு. வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்: பிரச்சினைகளை கடக்க நல்ல வழி கிடைக்கும். பணப் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் சில உதவிகள் கிடைக்கும். தைரியம் கூடும். குடும்பத்துக்குள் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கவும்.

மிதுனம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீடு கட்டுவதற்கு,வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

கடகம்: தூக்கம் குறையும். உங்களது திறமை மீது நம்பிக்கை வைப்பது நல்லது. உங்களை யார் தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்க வேண்டாம். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்: உறவினர், நண்பர்கள் மூலம் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் அதிகமாகும். டிவி, ஃப்ரிட்ஜ் பழுதாகும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். பணவரவு உண்டு.

கன்னி: பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் என்று உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். கனிவாகப் பேசி அனைவரையும் ஈர்ப்பீர்கள்.

துலாம்: திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். மனைவிவழியில் உதவிகள் உண்டு. குடும்ப பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

விருச்சிகம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். உறவினர், நண்பர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

தனுசு: குடும்பத்தினருடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். மகள், மகனின் திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். கலை பொருட்கள் சேரும்.

மகரம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர். தன் கையே தனக்குதவி என்பதையும் உணர்வீர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர், நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

மீனம்: குடும்ப சூழ்நிலை அறிந்து, பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x