Published : 31 Oct 2023 05:50 AM
Last Updated : 31 Oct 2023 05:50 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று வரிசையாக சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக செயல்படவும். பூர்வீக நிலப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். உறவினர் மத்தியில் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

கடகம்: பணப் புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். பயணங்கள் இனிதாக இருக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு நிறைவடையும்.

சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும். பணவரவு உண்டு.

கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக் கூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

துலாம்: புதிய வீடு வாங்க முயற்சிப்பீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். அவர்
களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

விருச்சிகம்: மகள், மகனின் திருமண பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர் களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.

தனுசு: அக்கம் - பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுக்கிடையே மனம் விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: மனக் குழப்பம், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: ஆடை, அணிகலன் சேரும். மகளின் கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x