Published : 22 Oct 2023 05:55 AM
Last Updated : 22 Oct 2023 05:55 AM
மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு செயல்
படுவார்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பள்ளி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த - பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை தீர வழி கிடைக்கும்.
கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைத்து செயல்படுவீர். கிரஹப்பிரவேசம், திருமணம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள்.
சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். கலை பொருட்கள் சேரும்.
கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி செய்வீர்கள்.
துலாம்: குழப்பங்கள், கவலைகள் நீங்கி, மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள் ஆதரிப்பார்கள்.
விருச்சிகம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும்.
தனுசு: இழுபறியாக இருந்த செயல்கள் நடந்தேறியதால் மன நிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தை அனுசரித்து போவீர். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உடன் பிறந்தவர்களால் நன்மையுண்டு.
மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என
பார்த்து கொள்ளுங்கள். விருந்தினர் வருகை உண்டு.
கும்பம்: ஆடம்பரமான செலவுகளை குறைக்க வேண்டும். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன் பிறந்தவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT