Published : 03 Oct 2023 05:45 AM
Last Updated : 03 Oct 2023 05:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். முக்கிய பிரமுகர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உறவினர் வருகை உண்டு.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பழைய வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்க திட்டமிடுவீர்கள்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உறவினர்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று சுபச் செலவுகள் வரும்.

கன்னி: குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை ஏற்படும். பணப் புழக்கம் கணிசமாக உயரும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் அமைதியாக செயல்படவும்.

விருச்சிகம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். தடைபட்ட திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த - பந்தம் உங்களைத் தேடி வரும். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நனைவாகும். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள்.

மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x