Published : 01 Oct 2023 05:24 AM
Last Updated : 01 Oct 2023 05:24 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தவறுகளை சுட்டி காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர். பழைய வாகனம் செலவு வைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.

ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் பண உதவி கேட்டு தொந்தரவு தருவர். பழைய வழக்குகள் விசாரணைக்கு வரும் பூர்வீக
வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி செய்வீர்.

மிதுனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளுக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் பணி கிடைக்கும்.

கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். கையில் தேவையான அளவு பணம் இருக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். பிள்ளைகளின் நினைவாற்றல் பெருகும். மகளின் கல்யாண பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். நீண்ட நாளாக சந்திக்காத நண்பர் உங்களை தேடி வருவார்.

கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளாதீர். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். கிரஹப் பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்.

தனுசு: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: சகோதர வகையில் ஆதாயம் பெறுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். மகளின் திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மனதில் இருந்த பயம் விலகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x