Published : 30 Sep 2023 06:00 AM
Last Updated : 30 Sep 2023 06:00 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தம்பதிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். பழைய வழக்கு தீர வழி கிடைக்கும்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். இல்லத்துக்கு தேவையான நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். முக்கிய பிரமுகர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். கலை பொருட்கள் சேரும்.

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பிறரிடம் குடும்ப பிரச்சினைகளைக் கூற வேண்டாம்.

கன்னி: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். பூர்வீக வீடு, மனை தொடர்பான சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

தனுசு: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பழைய வழக்குகளின் தீர்ப்பு, உங்களுக்கு சாதகமாக அமையும்.

மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்ச்சிகள் நடைபெறும்.

கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வழக்குகள் சாதகமாகும்.

மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கோபத்தால் இழப்பு ஏற்படலாம். பிறர் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். குடும்ப பிரச்சினைகளால் அமைதி இழப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x