Published : 27 Sep 2023 05:46 AM
Last Updated : 27 Sep 2023 05:46 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்கள் ரசனைக்கேற்ற இடம் அமையும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். பழைய வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். பணவரவு உண்டு.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வேற்றுமொழி பேசுபவர், வேற்று மதத்தவர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். மகளின் திருமண பேச்சுவார்த்தை கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கடகம்: சிறு சிறு நெருப்பு காயங்கள் ஏற்படக் கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சினையில் சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர் . வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல முயற்சி மேற்கொள்வீர்கள். பணவரவு உண்டு.

கன்னி: சவால்களில் வெற்றி பெறுவீர். யாரையும் எதிர்பார்க்காமல் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர். வழக்கு சாதகமாகும். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

துலாம்: உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. பழைய வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: ஓரளவு மனப் போராட்டங்கள் ஓயும். குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

தனுசு: தன்னம்பிக்கை பிறக்கும். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழச்சிகள் ஏற்பாடாகும். புதிதாக தங்க நகைகள் வாங்குவீர்கள். நீண்ட நாளாக பேசாத நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணி வேரைக் கண்டறிந்து களைவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.

கும்பம்: வீடு, மனை வாங்கும்போது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். சகோதரர்கள் உதவுவர்.

மீனம்: சின்னச் சின்ன விஷயங்களையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x