Published : 12 Sep 2023 05:45 AM
Last Updated : 12 Sep 2023 05:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்.

ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த முரண்பாடுகள் நீங்கும். வீட்டுக்கு தேவையான நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களை மீது சுமத்தப்பட்ட வீண்பழி நீங்கும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். புதிய வேலை கிடைக்கும். குடும்ப பிரச்சினைகளை பிறரிடம் கூறி கொண்டிருக்க வேண்டாம்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும்.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x