Published : 04 Sep 2023 05:35 AM
Last Updated : 04 Sep 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவையாக சொல்லும் கருத்துகள்கூட சீரியஸாக வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.

மிதுனம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். வேலைச்சுமை குறையும். குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

கடகம்: உங்களை சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள், தொந்தரவுகள் அகலும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். பண வரவு கூடும்.

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் தூக்கியெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் சற்று தாமதமாகும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

துலாம்: சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். புதிய ரக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பொறுப்பை உணர்ந்து நடக்கும் பிள்ளைகளை பாராட்டுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும். எதிலும் பொறுமை தேவை.

தனுசு: மனைவி வழி உறவினர்களால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீண், ஆடம்பர செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அரசு, வங்கி காரியங்கள் சாதகமாக முடியும்.

மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பண வரவு உண்டு. பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும்.

மீனம்: நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x