Published : 23 Aug 2023 05:34 AM
Last Updated : 23 Aug 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: எதிர்பார்த்தவற்றில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பூர்வீகவீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம் என்று விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவு உண்டு.

கன்னி: தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை அடைவீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் சாதனையால் பெருமை அடைவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. பால்ய நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.

தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அடுத்தவர் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். யாருக்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.

கும்பம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்க வேண்டிவரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x