Published : 22 Aug 2023 05:45 AM
Last Updated : 22 Aug 2023 05:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்க வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களால் உறவினர்கள், நண்பர்கள் பயனடைவார்கள்.

கடகம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பர்.

சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பழைய வாகனத்தை சீர் செய்வீர்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்.

துலாம்: அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்து கொள்ளாதீர். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள ஆலோசனை செய்வீர்.

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்களுடன் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதி பெருகும்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வீட்டில் சில சீரமைப்பு பணிகளை மேற்கொள்வீர்கள்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் இருந்த வீண் பயத்தை நீக்கி, முன்னேற்றப் பாதையில் செல்லவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x