Published : 15 Aug 2023 05:40 AM
Last Updated : 15 Aug 2023 05:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அயல்நாட்டு பயணம் அமையும்.

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வீக வீட்டை விற்கும் முயற்சி வெற்றியடையும்.

மிதுனம்: ஷேர் மூலம் பணம் வரும். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த பழைய பாக்கி கைக்கு வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடியும்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பழைய பிரச்சினைகள் தலை தூக்க வாய்ப்பு உள்ளது. வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

சிம்மம்: பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தாயின் உடல்நலன் சீராகும்.

கன்னி: கவலைகளை ஒதுக்கிவிட்டு, பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: புதிய பொறுப்பு,பதவிகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் விஐபிகளும் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். ஒரே நாளிலேயே வெகுதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல் நலக் குறைவுகள் என்று எது வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: பிள்ளைகளின் சாதனைகளால் உற்சாகம் அடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர்கள். வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x