Published : 10 Aug 2023 05:30 AM
Last Updated : 10 Aug 2023 05:30 AM
மேஷம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்தினருக்கு ஆடை, ஆபரணம் வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். உறவினர்கள் உதவுவார்கள்.
ரிஷபம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நாவடக்கம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நீண்ட நாட்களாக பேசாத உறவினர் வலிய வந்து பேசுவார்கள்.
கன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். சொந்த - பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வாகன வசதி பெருகும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.
துலாம்: புது முதலீடுகளை தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். மனதில் தெளிவு பிறக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எல்லோரும் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். ஒரு நிலத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். கலை பொருட்கள் சேரும்.
மகரம்: புதிய சிந்தனைகள் தோன்றும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.
கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
மீனம்: குடும்பத்தாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழி உறவினர்கள் பாராட்டுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். கடன்கள் ஒவ்வொன்றாகத் தீர வழி கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT