Published : 06 Aug 2023 05:34 AM
Last Updated : 06 Aug 2023 05:34 AM
மேஷம்: பணவரவுக்கு குறைவிருக்காது. பழைய கடன்களில் ஒன்றை பைசல் செய்வீர்கள். புதிய டிவி, மிக்ஸி வாங்குவீர்கள். சீமந்தம், கிரஹப்பிரவேசம் உள்ளிட்ட சுப காரியங்களால் வீடு களை கட்டும். பொருள் சேரும்.
ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் மறையும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். வீடு வாங்க, கட்ட வங்கி கடனுதவி கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்.
மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு வாங்கும் சிந்தனை மனதில் உதிக்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
கடகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். முக்கிய பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் எளிதில் நிறைவடையும்.
சிம்மம்: வேலைச்சுமை, டென்ஷன், நண்பர்களுடன் கருத்து மோதல் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் வேண்டாம். சொந்த - பந்தங்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப் புழக்கம் அதிகரிக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
துலாம்: குழப்பம் நீங்கி, தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். பிள்ளைகளின் தவறை சுட்டிக் காட்டி திருத்துவீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். மனக் குழப்பம் தீரும்.
தனுசு: பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். தாயாருடன் கருத்து மோதல் வரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.
மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொருட்கள் சேரும்.
கும்பம்: உங்களது திறமை, புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். புதிய பதவி, பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
மீனம்: புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகவும். வீண் விவாதம் தவிர்க்கவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment