Published : 05 Aug 2023 05:35 AM
Last Updated : 05 Aug 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உடலில் சோர்வு, களைப்பு இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழும் வாய்ப்புண்டு.

மிதுனம்: நீண்ட நாளாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்து, கடன் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் மாறும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத் தட்டுப்பாடு வரக் கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரக்கூடும். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீர வழி கிடைக்கும்.

கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

துலாம்: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாளாக இருந்த குழப்பங்கள் நீங்கும். முக்கிய பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். அண்டை அயலாருடன் அளவாக பேசிப் பழகவும். நீண்ட நாளாகப் பேசாத உறவினர்கள் நலம் விசாரிப்பார்கள்.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமென எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். பழைய பிரச்சினைகள் தலைதூக்கினாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்.

கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரியும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மீனம்: எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை பயக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாகச் செல்ல வேண்டும். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யோகா, தியானம், ஆன்மிகத்தில் மனதை செலுத்தவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x