Published : 01 Aug 2023 05:35 AM
Last Updated : 01 Aug 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

மிதுனம்: ஒரே நாளில் நான்கைந்து வேலைகளை பார்க்கவேண்டி வரும். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதால் பழிச்சொல் ஏற்படக் கூடும்.

கடகம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குழப்பமில்லாத, தெளிவான முடிவுகளால் நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும்.

சிம்மம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். சகோதரர்களின் நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனம் சீராகும். பூர்வீக வீட்டை சீரமைத்து, புதுப்பித்து கட்டுவீர்கள்.

துலாம்: நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப்போவீர்கள். விருந்தினர் வருகை உண்டு. பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்க்கவும்.

விருச்சிகம்: காரியங்களை முடிப்பதிலிருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீரும்.

தனுசு: ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழவிரும்புவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மகரம்: முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகவும்.

கும்பம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். பணவரவு உண்டு.

மீனம்: தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். விரும்பிய பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். முன்கோபம், வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x