Published : 30 Jul 2023 05:55 AM
Last Updated : 30 Jul 2023 05:55 AM
மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நீண்ட நாளாக இருந்த குழப்பம் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிட்டும். கையில் பணம் புரளும்.
ரிஷபம்: கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். பால்ய நண்பர்கள் ஆதரிப்பார்கள்.
மிதுனம்: பணவரவு உண்டு. தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான சில நவீன மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டு பேசுவீர். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளின் உதவி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
கன்னி: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.
துலாம்: புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் -மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு செயல்படுவர்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் சீமந்தம், கிரஹப்பிரவேசம் என்று கலகலப்பான சூழல் உருவாகும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். வீண் விவாதங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.
தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல ஏற்பாடாகும்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீர வழி கிடைக்கும்.
கும்பம்: குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவு களை எடுப்பீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். புதிய பொறுப்புகளுக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள். பணவரவு உண்டு.
மீனம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT