Published : 11 Jul 2023 05:32 AM
Last Updated : 11 Jul 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அனைவரிடத்தும் இணக்கமான போக்கு நன்மையைத் தரும்.

மிதுனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். கையில் பணம் தேவையான அளவு இருக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் பெருகும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தருவதாக அமையும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். தியானம் செய்யவும்.

துலாம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு உண்டு. வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடப்பார்கள்.

தனுசு: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்கள். அதற்கான வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: சகோதர வகையில் ஆதாயம் பெறுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வீட்டில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு உண்டு.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x