Published : 07 Jul 2023 05:28 AM
Last Updated : 07 Jul 2023 05:28 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

ரிஷபம்: மன உளைச்சல் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு செயற்கரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற மிகவும் போராட வேண்டி வரும்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். நண்பர், குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் இருந்து வரன் அமையும்.

கன்னி: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தள்ளி இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொருட்கள் சேரும்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். இழுபறி வழக்கில் இருந்து வந்த தேக்கநிலை மாறும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர்கள்.

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. புது வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன் வசூலாகும்.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழியில் உதவிகரமாக இருப்பார்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். தியானம் செய்யவும்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பழைய வாகனம் செலவு வைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x