Published : 05 Jul 2023 05:28 AM
Last Updated : 05 Jul 2023 05:28 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். சொந்த - பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய வாகனத்தை விற்பனை செய்ய முயற்சிப்பீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி உண்டு. பொருள் சேரும்.

விருச்சிகம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.

தனுசு: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.

மகரம்: பல வேலைகளை இழுத்து போட்டுப் பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். தியானம் செய்யவும்.

கும்பம்: ஆடம்பரமான செலவுகளை குறைக்க பாருங்கள். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டு.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x