Published : 24 Jun 2023 06:19 AM
Last Updated : 24 Jun 2023 06:19 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். தள்ளிப் போன மகளின் திருமணம் கைகூடி வரும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். பணவரவு உண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டி முடிப்பீர்கள்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு உண்டு.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும். புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்பு தொடர்பாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். சீமந்தம், கிரஹப்பிரவேசம் என்று வீடு களைகட்டும்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு போன்றவை நடக்கும். சகோதர வகையில் உதவியுண்டு. பிள்ளைகளின் சாதனையால் மகிழ்ச்சியடைவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்பு தேடி வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். உறவினர் வருகை உண்டு.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட் செலவு வரும். வாகனம் பழுதாகும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுங்கள். புதிய தொழில் தொடங்குவது குறித்து யோசித்து முடிவு செய்யவும்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீக நிலம்,சொத்துப் பிரச்சினைகள் தீரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய பொறுப்புக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x