Published : 18 Jun 2023 06:45 AM
Last Updated : 18 Jun 2023 06:45 AM
மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனை பெருமை அடைய வைக்கும்.
மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். மற்றவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவு உண்டு.
கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்
டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு உண்டு.
துலாம்: மனக் குழப்பங்கள் விலகும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பொருள் சேரும்.
விருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். எதிலும் நிதானமாக செயல்படவும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
மகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தி
யில் மதிக்கப்படுவீர். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர், நண்பர்
கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். தியானம் செய்யவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT