Published : 08 Jun 2023 05:02 AM
Last Updated : 08 Jun 2023 05:02 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கவுரவம் கிடைக்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மிதுனம்: திடீர் செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி கொண்டிருக்காதீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

கடகம்: எதிலும் தெளிவு பிறக்கும். பழுதாகியிருந்த பழையவாகனத்தை மாற்றி புதிது வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். பூர்விக சொத்து பிரச்சினைகள் தொடர்பான வழக்கு முடிவுறும்.

சிம்மம்: எந்த தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வி.ஐ.பிகளால் சில வேலைகள் முடிவடையும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. பூர்விக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவு
கூர்ந்து மகிழ்வீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். புதிய வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணமும் கைக்கு வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

மகரம்: தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதில் குழப்பம் வரும். கையொப்பமிட்டு காசோலைகளை வைக்க வேண்டாம். நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

கும்பம்: வேலைச்சுமை அதிகரிக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் தடங்கல் ஏற்பட்டு பிறகு முடியும். சோர்வு, களைப்பு வரும். யாரையும் நம்பாமல், எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக நீங்களே முடிப்பது நல்லது.

மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். அக்கம் - பக்கத்தினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பணவரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x