Published : 06 Jun 2023 05:33 AM
Last Updated : 06 Jun 2023 05:33 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களுக்கு உதவுவது போல் உபவத்திரத்தை தருவார்கள். சொத்துப் பிரச்சினையில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வேற்று மதத்தவர் உதவுவார். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணவரவு உண்டு.

கடகம்: அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கலை பொருட்கள் சேரும்.

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால்
ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினையில் தீர்வு கிடைக்கும்.வேடிக்கை பேச்சு வினையாக முடியும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப்பொலிவு கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்பார்கள்.

தனுசு: பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

மகரம்: முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நீண்ட நாளாக மனதில் இருந்து வந்த பயம் நீங்கும்.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்தேறும்.

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பரால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதிய வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x