Published : 04 Jun 2023 05:16 AM
Last Updated : 04 Jun 2023 05:16 AM
மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டி ருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ரிஷபம்: பணப்பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்த வர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்
வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கலை பொருட்கள் சேரும்.
மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கிராமத்து திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும்.
சிம்மம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு உண்டு.
கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப் பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்.
துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களைத் தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உறவினர் வருகை உண்டு.
தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். யாரையும் நம்பி ஏமாறாதீர்.
மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் தேவை.
கும்பம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு.
மீனம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்
தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பொருள் சேரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT