Published : 02 Jun 2023 05:30 AM
Last Updated : 02 Jun 2023 05:30 AM
மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிலும் நிதானமாக செயல்படவும்.
கடகம்: எதிர்பார்த்தவற்றில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. கிராமத்து திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும்.
தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை
பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்
கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மன அமைதிக்கு தியானம் செய்யவும்.
மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT