Published : 22 May 2023 05:35 AM
Last Updated : 22 May 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பொருட்கள் சேரும்.

ரிஷபம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். துடிப்புடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: வீண் அலைச்சலால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பண வரவு உண்டு.

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கன்னி: தைரியமான முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மகான்களின் ஆசி கிடைக்கும்.

துலாம்: வீண் அச்சம், கவலைகள், மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். உதவி கேட்டு உறவினர்கள், பால்ய நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும்.

தனுசு: வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப் படுத்துவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.

மகரம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும். உற்சாகமான, எதார்த்தமான பேச் சால் அனைவரையும் கவர்வீர்கள்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன், பேச்சாற்றல் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும்.

மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக் குள் மகிழ்ச்சி உண்டு. விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பெற்றோருடன் சிறு கருத்து மோதல் வரக்கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x