Published : 16 May 2023 05:36 AM
Last Updated : 16 May 2023 05:36 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் எதிர்பாராது மனத்தாங்கல் வரக் கூடும்.
ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும்.
மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விஐபியுடன் சந்திப்பு நிகழும். கலைபொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.
கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். பழைய சொத்து சிக்கல்களில் ஒன்று தீரும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.
துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
தனுசு: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.
மகரம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வேலை தேடுவோருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடாதீர்கள். எதிலும் நிதானம் அவசியம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT