Published : 11 May 2023 05:36 AM
Last Updated : 11 May 2023 05:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப் பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த - பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத் தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விஐபி களின் நட்பு கிடைக்கும். கலை பொருட்கள் சேரும்.

துலாம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். குடும்பத் தாரின் ஆதரவு பெருகும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங் களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. பணவரவு திருப்தி அளிக்கும்.

மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக் கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்க்கவும். மனதில் வீண் பயம் தோன்றும்.

கும்பம்: ஆடம்பரமான செலவுகளை குறைக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். நண்பர்கள், குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x