Published : 09 May 2023 05:32 AM
Last Updated : 09 May 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்த - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர், உறவினர்களுடன் மனத்தாங்கல் உண்டாகும்.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டுக்கு தேவையானதை வாங்குவீர்கள்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். முக்கிய விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். பொருள் சேரும்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு உண்டு.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம், பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பீர்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். வெளியூர் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்கள்.

மீனம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x