Published : 08 May 2023 05:32 AM
Last Updated : 08 May 2023 05:32 AM
மேஷம்: யாரிடமும் பழைய கசப்பான சம்பவங்களை பேச வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலை யிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்த வர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலை களை செய்து முடிப்பீர்கள். பொருட்கள் சேரும்.
மிதுனம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். உற்சாகமான, இயல் பான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
கடகம்: நீண்ட நாட்களுக்கு பிறகு, குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனை கள், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலையை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வீர்கள்.
கன்னி: இடையூறு, தடைகளை பொருட்படுத்தாமல், உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். பெரியவர்கள், மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
தனுசு: பிள்ளைகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருப் பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள்.
மகரம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன் யோன்யம் அதிகரிக்கும். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
கும்பம்: தைரியமாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.
மீனம்: வீண் அச்சம், கவலை, மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT