Published : 16 Apr 2023 05:32 AM
Last Updated : 16 Apr 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

ரிஷபம்: மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. பூர்வீக சொத்து பிரச்சினை தொடர் பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு செயற்கரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். பணவரவு உண்டு.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

கன்னி: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தள்ளி இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொருட்கள் சேரும்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புது வீடு, மனை, வாகனம் வாங்க யோசிப்பீர்கள். புதிய நண்பர்களால் தொல்லை அதிகரிக்கும்.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாளாக பேசாத நண்பர் வந்து பேசுவார்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் அலைச்சல், செலவீனங்கள் அதிகரிக்கும்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மன அமைதிக்கு தியானம் செய்யவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x