Published : 13 Apr 2023 05:34 AM
Last Updated : 13 Apr 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புத்திசாலித் தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பிரச்சினைகளில் சிக்க வேண்டாம்.

ரிஷபம்: எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். மன உளைச்சல் அதிகரிக்கும். மாலை முதல் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மிதுனம்: மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். தாயார் ஆதரித்து பேசுவார். மாலை முதல் நிதானம் தேவை. வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து மாற்றி அமைப்பீர்கள்.

சிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பரால் ஆதாயம் உண்டு.

கன்னி: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளை களின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும்.

துலாம்: அதிகம் உழைக்க வேண்டி வரும். முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர். வேண்டா வெறுப்புடன் சிலரிடம் வியாபாரம் செய்ய நேரிடும்.

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர் கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள். ஆனால் மாலை முதல் கணவன் - மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பழைய பாக்கி வசூலாகும். புனித தலங்களுக்குச் செல்வீர்கள்.

மகரம்: குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக் கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள். பொருட்கள் சேரும்.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப் பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மன அமைதி பெற தியானம் செய்யவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x