Published : 12 Apr 2023 05:34 AM
Last Updated : 12 Apr 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுக மாக முடியும். சொந்த - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர். பூர்வீக சொத்தை விற்றுவிட்டு, புதிய வீடு கட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசிய மாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர் கள். சொந்த - பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். கிராமத்து கோயிலை புனரமைத்துக் கட்டுவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத் திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக் குறை நீங்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர் களால் மனநிம்மதி கிட்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்கப் பழக வேண்டும்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். செய்யும் செயலால் பெருமை அடைவீர்கள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். ஓரளவு பணவரவு உண்டு.

மீனம்: வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம் பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x