Published : 26 Mar 2023 06:20 AM
Last Updated : 26 Mar 2023 06:20 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.


ரிஷபம்: செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தியானம் செய்யவும்.


மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வீடு, வாகன பராமரிப்பால் செலவுகள் அதிகரிக்கும்.


கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட் டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்த - பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.


சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள்.


கன்னி: குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பணப்புழக்கம் கணிசமாக உயரும் எதிர்பாராத இடத்திலி
ருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.


துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளை களால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்கு வீர்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.


தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த - பந்தம் உங்களைத் தேடி வரும். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.


மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நினைவாகும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.


கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும்.


மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் தேவை அறிந்து உதவிக்கரம் நீட்டுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x