Published : 26 Jan 2023 03:03 PM
Last Updated : 26 Jan 2023 03:03 PM

சிம்மம் ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சிம்மம் ( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சனி - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: 04-02-2023அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-02-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21-02-2023 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: அதிகார மிடுக்கும் தயாள குணமும் கொண்ட சிம்மராசியினரே... இந்த மாதம் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பணஉதவியும் கிடைக்க பெறலாம்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும்.

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து பாராட்டுக்கள் கிடைக்க பெறுவீர்கள்.

அரசியல் துறையினருக்கு உயர்பதவிகள் கிடைக்க கூடும். எல்லாவகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.

மகம்: இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பூரம்: இந்த மாதம் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

உத்திரம்: இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சினைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பிப்ரவரி மாத பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x