Published : 30 Sep 2022 06:01 AM
Last Updated : 30 Sep 2022 06:01 AM
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: இம்மாதம் 3-ம் தேதி புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-ம் தேதி செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-ம் தேதி சூர்யன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-ம் தேதி சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 23-ம் தேதி புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: ரத்த சம்பந்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசி அன்பர்களே... நீங்கள் தலைமை தாங்குவதில் வல்லவர்கள். இந்தமாதம் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.
குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.
கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். அரசியல் துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். மாணவர்களுக்கு பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. சகமாணவர்களால் அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம்: இந்தமாதம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்கு பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும்.
பூசம்: இந்தமாதம் மனமகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வசிந்தனை அதிகரிக்கும். பணப்பிரச்சினை நீங்கும்.
ஆயில்யம்: இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும்.
பரிகாரம்: ஸ்ரீகாளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment