Published : 25 Aug 2022 04:14 PM
Last Updated : 25 Aug 2022 04:14 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.25 - 31

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்: இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினத்தினரால் காரிய அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் உங்களது ஆலோசனையை கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினருக்கு உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.

மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரிடையாகப் பார்க்கவேண்டியவர்களை பார்த்து பேசுவது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். பொறுமையாக் இருந்து உங்கள் பணிகளைப் பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க கஷ்டங்கள் தீரும்.

***********

விருச்சிகம் கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், புதன் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்: இந்த வாரம் ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தானாகவே தேடி வரும். உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் நிலை உண்டு. உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க கஷ்டங்கள் தீரும்.

***********

தனுசு கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்: இந்த வாரம் சுணங்கி கிடந்த காரியங்களில் வேகம் ஏற்படும். காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு சரியாகும். ராசிநாதன் குருவால் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும்.

புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. பெண்கள் முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.

பரிகாரம்: வாராகியை வணங்க சிக்கல்கள் தீரும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.25 - 31 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x