Published : 09 Aug 2022 07:11 PM
Last Updated : 09 Aug 2022 07:11 PM
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசை கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர். இதனைத் தொடர்ந்து இசைக் கலைஞர்கள் பறந்து கொண்டே இருக்கும் பியோனாவில் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் உள்ளிட்ட பாடல்களை இசைத்தனர். மேலும் பறந்து கொண்டே படையாப்பா பாடலை டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் வாசித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகர்களின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு, கண்ணாமூச்சி, ஆசனம், கபடி, பந்தாட்டம் ஆடை அலங்காரம், செஸ் குறித்து கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT