Published : 12 May 2022 02:34 PM
Last Updated : 12 May 2022 02:34 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - ராசியில் சூர்யன், புதன்(வ), ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - விரய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வீண் பழி உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். பயணச் செலவு உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் நல்லது. அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
*********************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு - விரய ஸ்தான ராசியில் சூர்யன், புதன்(வ), ராகு என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் ராசிக்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
*******************
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தான ராசியில் சூர்யன், புதன்(வ), ராகு என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைத் தரும் காலகட்டமாக அமையும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும்.
தொழிலில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. தாய் - தாய் வழி உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும். அனைத்தையும் திறமையாக சமாளீத்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமையில் தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment