Published : 17 Mar 2022 05:01 PM
Last Updated : 17 Mar 2022 05:01 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் புதன், குரு - சுக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று ராகு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கையாளும்போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.. மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினர் தங்கள் வேலைகளை கவனமாக செய்வது நல்லது. மாணவர்களில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
********************
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - விரய ஸ்தானத்தில் புதன், குரு - ராசியில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று கேது பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுப்பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும்
பரிகாரம்: பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும் நன்மையும் உண்டாகும்.
************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment