Published : 17 Mar 2022 04:22 PM
Last Updated : 17 Mar 2022 04:22 PM

மிதுனம், கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு - விரைய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். அனைத்தையும் சமாளிக்கும் திறன் வந்து சேரும்.

தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பெண்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. மனத்தடுமாற்றம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை

பரிகாரம்: ஸ்ரீதுர்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்

***********

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், குரு - லாப ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி - திங்கட்கிழமை - அன்று கேது பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


இந்த வாரம் மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின்போதும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவியை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

******************


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x