Published : 02 Feb 2022 11:44 AM
Last Updated : 02 Feb 2022 11:44 AM

மேஷ ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள் ; நல்ல திருப்பம்; வீண் பேச்சு வேண்டாம்; பண வரவு உண்டு! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம்:


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக் (வ) - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.


கிரக மாற்றங்கள்:
09-02-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-02-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


நியாயமுள்ளவர்களுக்காகவும் நலிந்தவர்களுக்காகவும் பாடுபடும் குணமுடைய மேஷ ராசி அன்பர்களே!


இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. .வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.


தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.


குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.


அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.


கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.


பெண்கள் எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது.
மாணவர்கள் வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.


அஸ்வினி:
இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


பரணி:
இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டுகளில் பரிசுகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதேநேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் ஆராய்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மை அளிக்கும். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும்.


கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும். பெண்களுக்கு கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினரின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பலன்களைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16
~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x