Published : 06 Jan 2022 04:13 PM
Last Updated : 06 Jan 2022 04:13 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புத (வ), சுக் (வ), சனி - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்:
வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கும் சிம்ம ராசியினரே!
நீங்கள் எதிலும் முதலாவதாக இருப்பீர்கள். இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். பணவரத்து எதிர்பார்த்ததைப் போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துகளைக் கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானையும் நவக்கிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
******************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புத (வ), சுக் (வ), சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்:
சாதுர்யமாகப் பேசி சகல காரியங்களையும் சாதிக்கும் திறமை உள்ள கன்னி ராசியினரே!
நீங்கள் உழைப்பினால் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமுகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பெண்களுக்கு சாதக பாதகங்களைப் பற்றி கவலைப்படாமல் எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
*************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT